துரந்தர் 2 வசூலை தூக்கி சாப்பிடுமா ராமாயணா?.. உலக வசூல் இதுவரை எவ்வளவு?..
இந்தியத் திரையுலகில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ராமாயணா திரைப்படம் வேகமாக முன்னேறி வருகிறது.
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் வெளியான துரந்தர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,852 கோடி வசூலித்து இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக முதலிடத்தில் உள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான ராமாயணா திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், ரவி துபே, அருண் கோவில் நடித்துள்ளனர். நவம்பர் 5ஆம் தேதி வெளியான இப்படம் 19 நாட்களில் உலகளவில் ரூ.1,704.65 கோடி வசூலித்துள்ளது.
மேலும், துரந்தர் 2-வின் ரூ.1,852 கோடி சாதனையை முறியடிக்க ராமாயணா இன்னும் சுமார் ரூ.148 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் தற்போது துரந்தர் 2 சாதனையை ராமாயணா முறியடிக்குமா அல்லது இந்த ஆண்டின் முதலிடத்தை துரந்தர் 2 தக்கவைத்துக் கொள்ளுமா என்பதே ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 3ம் இடத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் 800 கோடி வசூலுடன் உள்ளது.
