முதல் நாள் வசூலில் அதிபுருஷ் சாதனையை தொட முடியாத ராமாயணா

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  ராமாயணா திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலைப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
ramayana movie

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  ராமாயணா திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலைப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். மேலும், கன்னட நடிகர் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளதால் ராமாயணா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்தது. குறிப்பாக, படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. நேற்று வெளியான ராமாயணா குறித்து பாசிடிவான விமர்சனக்களே அதிகம்  வருகிறது. குறிப்பாக படத்தின் பிரமாண்ட காட்சி அமைப்புகள், யாஷ் நடிப்பு ஆகியவை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமாயணா திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் ரூ.64.85 கோடி நிகர வசூலையும், ரூ.77.50 கோடி மொத்த வசூலையும் ஈட்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.   முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 2023ம் ஆண்டு வெளியான அதிபுருஷ் என்ற படம்  முதல் நாளில் ரூ 88.75 கோடி சாதனை செய்திருந்தது. அதனை ஒப்பிடுகையில் ராமாயணா முதல் நாஅள் வசூலில் சாற்று பின் தங்கியிருந்தாலும் ரசிகர்களின் பாசிடிவான விமர்சனக்களால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

 

Tags

From Around the web