இந்த அளவில் அதிக வசூல்!.. புஷ்பா 2 பட சாதனையை முறியடித்த ராமாயணா!..

 
ramayana

ராமாயணக் கதை எத்தனை முறை தொலைக்காட்சி தொடராகவும், திரைப்படங்களாக வந்தாலும் சரி.. இந்திய சினிமா ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தீபாவளிக்கு வெளியான ராமாயணா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் வாழும் இந்தியர்களும் இந்த படத்தை விரும்பி பார்த்ததால் வசூல் ரூ.1500 கோடியை தாண்டியிருக்கிறது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். படம் வெளியாகி 21 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் ராமாயணா படம் ரூ.1755 கோடி வசூலாகியிருக்கிறது. இதன்மூலம் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தின் ரூ.1742 கோடி வசூலை ராமாயணா திரைப்படம் தாண்டி அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் ராமாயணா திரைப்படம் இதுவரை ரூ.1173.60 கோடியும் வெளிநாடுகளில் ரூ.582 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ராமாயணா படத்தின் இரண்டாம் பாகம் 2028ம் ஆண்டு தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Murugan ..
Murugan ..

5196 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web