ரூ.1200 கோடி வசூலை தாண்டியிலும் அப்செட்டில் ராமாயணா படக்குழு!...

 
ramayana

கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பேன் இந்தியா படமாகவே வெளியாகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யஷ், சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவான ராமாயண திரைப்படம் கடந்த 5ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததால் நல்ல வசூலையும் இப்படம் பெற்று வருகிறது. தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ராமாயணா திரைப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது..

ஆனாலும், படத்தின் தயாரிப்பாளர்கள் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில், ராமாயணா இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டையும் சேர்த்து மொத்த பட்ஜெட் ரூ.4000 கோடி என்கிறார்கள். அப்படி பார்த்தால் முதல் பாகம் ரூ.2000 கோடிக்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என சொல்கிறார்கள். எனவே தற்போது கிடைத்துள்ள வசூல் பத்தாது என்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்..

Murugan ..
Murugan ..

5151 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web