Categories: Cinema News latest news throwback stories

கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மகள்… பகீர் தகவல்

தமிழ் சினிமா நடிகை ரம்பா அவரது குழந்தைகளும் கார் விபத்தில் சிக்கி இருப்பதாகவும், அவரது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரம்பா

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. 2010ம் ஆண்டு அவருக்கும் கனடாவை சேர்ந்த இந்திரன் பத்மநாதன் என்பவருக்கும் திருமணம் ஆனது. அவர்களுக்கு லாவண்யா, ஷாஷா என்ற இரு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். ரம்பா குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகிறார்.

ரம்பா

இந்நிலையில், ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது மற்றொரு காருடன் மோதி விபத்துக்கு உள்ளானதாம். ரம்பா, அவரின் உதவியாளர், லாவண்யா மட்டும் சிறு காயங்களுடன் தப்பித்து விட்டனராம். ஆனால் அவரின் இளைய மகள் சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தனது இன்ஸ்டா பக்கத்தில் கேட்டு கொண்டுள்ளார்.

Published by
Shamily