Categories: Cinema News latest news

விஜயகாந்த் விஷயத்துல அது ஒன்னுதான் பயம்!.. ரம்பா பகிர்ந்த சீக்ரெட்..

தமிழ் சினிமாவில் கருப்பு எம்ஜிஆர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த். யாருக்காவது என்ன உதவி வேண்டுமானாலும் நேரம் பாராமல் விரைந்து செய்வதில் வல்லவர்.

தான் ஒரு பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாமல் சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார் விஜயகாந்த். இவரால் பலன் பெற்றவர்கள் ஏராளம். இவரால் காப்பாற்றப்பட்ட சினிமா பிரபலங்கள் ஏராளம். என்னப் பிரச்சினையாக இருந்தாலும் முதல் ஆளாக இருப்பார் விஜயகாந்த்.

vijayakanth

எல்லாவற்றிற்கும் மேலாக பசியை போக்குவதை குறிக்கோளாக கொண்டார். தனக்கு வரும் உணவுதான் ஊழியர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று சொந்த செலவிலேயே உணவை வழங்கினார். இப்படிபட்ட மாபெரும் மனிதனை அந்த ஒரு விஷயத்தில் பார்த்தால் எனக்கு பயம் என்று தொடையழகி ரம்பா கூறியிருக்கிறார்.

நடிகை ரம்பாவும் கேப்டனும் இணைந்த தர்மச்சக்கரம் என்ற படத்தில் நடித்தனர். படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி போன்ற ஏரியாக்களில் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். அந்த நேரங்களில் மிகவும் கடுமையாக கூட்டம் அலைமோதுமாம். அதனாலேயே அதிகாலையில் படப்பிடிப்பை திட்டமிடுவார்களாம்.

இதையும் படிங்க : அறிமுகம் செய்தவர் கேட்ட உதவி!.. வாழ்நாள் முழுவதும் அதை செய்த ஜெய்சங்கர்.. மனுஷன் கிரேட்தான்..

பொதுவாக காலை 6 அல்லது 7 மணிக்குத்தான் படப்பிடிப்பை நடத்துவார்களாம். ஒரு சமயம் விஜயகாந்த் ரம்பாவிடம் எத்தனை மணிக்கு சூட்டிங் வருவாய் என்று கேட்டாராம். அதற்கு ரம்பா 7 மணிக்குத்தானே என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கேப்டனோ நான் 4.30மணிக்கு எல்லாம் வந்து விடுவேன், நீ அதே போல் வரமுடியுமா? என்று கேட்க

rambha2 vijayakanth

அதற்கு ரம்பா 6,7 மணிக்கு தானே சூட்டிங், அதுக்கு எதுக்கு 4.30மணிக்கு என்று நினைத்துக் கொண்டு மறு நாள் போயிருக்கிறார். சொன்னபடி விஜயகாந்த் 4.30மணிக்கு எல்லாம் வந்து உட்காந்திருக்கிறாராம். இதை பற்றி கூறிய ரம்பா நேரம் விஷயத்துல தான் விஜயகாந்தை நினைத்தால் எனக்கு கொஞ்சம் பயம் என்று கூறியிருந்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini