Categories: Cinema News latest news

விஜய் அரசியலுக்குள் வந்தால் நானும் வருவேன்- ஓப்பன் ஸ்டேட்மண்ட் விட்ட பிரபல காமெடி நடிகர்…

ரசிகர்களின் தளபதியாக திகழ்ந்து வரும் விஜய், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழையப்போவதாக பேச்சுக்கள் அடிப்பட தொடங்கின. தனது விஜய் மக்கள் இயக்கத்தை அப்படியே அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு விஜய் முயன்று வருகிறார் என்றும் கூறப்பட்டு வந்தது. எனினும் விஜய்யிடம் இருந்து இதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இது வரை வந்ததில்லை.

ஆனால் விஜய், சமீப காலமாக தனது திரைப்படங்களின் ஆடியோ லாஞ்ச்களில் அனல் தெறிக்கும் பேச்சுக்களை பேசி ரசிகர்களை ஆரவாரப்படுத்தி வருகிறார். மேலும் தமிழ் நாட்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து வருகிறார் விஜய். நேற்று அம்பேத்கர் பிறந்தநாளில் கூட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதே போல் சில நாட்களுக்கு முன்பு திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தமிழ்நாட்டின் அரசியல் போக்கை பற்றி கலந்துரையாடல் நடத்தியதாக கூட செய்திகள் வெளிவந்தன. விஜய்யின் இந்த போக்கு அவர் அரசியலில் நுழைவதற்காக தயாராகி வருகிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது என கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் கதாசிரியருமான ரமேஷ் கண்ணா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். ரமேஷ் கண்ணா எம்.ஜி.ஆரின் மிக நெருங்கிய உறவினர் என்பதால் அவரிடம் நிருபர், “நீங்கள் கட்சித் தொடங்க விருப்பம் உண்டா?” என கேட்டார்.

அதற்கு ரமேஷ் கண்ணா, “விஜய் அரசியலுக்கு வரட்டும் நான் கட்சித் தொடங்குகிறேன். ரஜினி, அஜித் போன்றோர் அரசியலுக்கு வரட்டும் நான் வருகிறேன்” என்று வெளிப்படையாக கூறினார். எம்.ஜி.ஆரின் மனைவியின் பெயர் ஜானகி என்பதை பலரும் அறிந்திருப்போம். ஜானகியின் மாமாதான் ரமேஷ் கண்ணாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வடிவேலு உள்ளே வந்ததால் ரமேஷ் கண்ணாவை விரட்டியடித்த இயக்குனர்… சொந்த கதையில் ஒரு சோக கதை…

Arun Prasad
Published by
Arun Prasad