எல்லாமே பொய்!.. இதுதான் உண்மை!.. சுந்தர்.சி விலகிய காரணத்தை சொன்ன ரமேஷ் கண்ணா!...
சுந்தர்.சி விலகிய காரணத்தை சொன்ன ரமேஷ் கண்ணா!...
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு என்பது தமிழ் சினிமாவில் கௌரவமாக பார்க்கப்படும். அதேபோல் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்குவதையும் பலரும் நல்ல வாய்ப்பாக கருதுவார்கள். ஆனால், இந்த இரண்டையும் விட்டு வெளியேறி இருக்கிறார் சுந்தர்.சி.
ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி. ஏன் விலகினார் என்கிற காரணத்தை அவர் வெளியிட்ட அறிக்கையில் சொல்லவில்லை. சில காரணங்களால் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். எனவே பலரும் பல விதங்களாக பேசினார்கள். குறிப்பாக சுந்தர்.சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதுதான் முக்கிய காரணம் என பலரும் சொன்னார்கள்.
இதுபற்றி செய்தியாளரிடம் பேசிய கமல்ஹாசனும் ‘என் நடசத்திரத்திற்கு பிடிக்கும் வரை கதை கேட்பேன்’ என சொல்லி அதை உறுதி செய்தார். ஒருபக்கம், கதை மட்டும் பிரச்சனை இல்லை. சௌந்தர்யா ரஜினி உள்ளிட்ட பலரிடமும் இந்த கதையை சொல்ல சொன்னதால் அதிருப்தியடைந்தே சுந்தர்.சி இந்த படத்திலிருந்து விலகியிருக்கிறார் எனவும் செய்திகள் வெளியானது. சிலரோ ரஜினி, கமல் இணைந்த படம். இதை சுந்தர்.சியால் கையாள முடியாது எனவும் பேசினார்கள்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா ஒரு புதிய தகவலை ஊடகம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ரஜினி படத்தை ஒப்புக் கொள்வதற்கு முன்பே மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர்.சி இயக்கி வந்தார். அடுத்து விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க அவர் ஒப்புக்கொண்டிருந்தார். இப்போது ரஜினி பட வாய்ப்பு வந்ததால் இந்த இரண்டு படங்களையும் விட்டு விட்டு வர வேண்டிய நிலை.
அதுவும் மூன்று மாதங்களில் இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்க வேண்டும் என ரஜினி சொல்கிறார். சுந்தர்.சிக்கு அதற்கு நேரமில்லை. அந்த இரண்டு படங்களையும் அப்படியே விட்டுவிட்டு ரஜினி படத்திற்கு வந்தால் ஒரு பெரிய படம் கிடைத்ததால் இந்த இரண்டு படங்களை விட்டு விட்டான் என பேசுவார்கள். அந்த கெட்ட பெயர் தனக்கு வரக்கூடாது என்றுதான் ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகி இருக்கிறார். மற்றபடி சுந்தர்.சியால் இது முடியாத விஷயமெல்லாம் ஒன்றுமில்லை’ என்று அவர் பேசியிருக்கிறார்.
