Connect with us

Cinema News

பசங்கள நைட் ரெடியா இருக்கச் சொல்லு…இங்கிலீஷ் படத்துக்கு போகணும்…யாரு சொன்னா… கேட்டா அப்படியே அசந்துருவீங்க…!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த்திரை உலகில் ஒரு அகராதி. அவர் நடிக்காத வேடங்களே இல்லை. அவரைப் பற்றி அவரது மகன்கள் ராம்குமார், பிரபு என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா…

முதலில் மூத்த மகன் ராம்குமார் சொல்வதைக் கேட்போம்.

01.05.1952 அன்று சுவாமிமலையில் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சீர்திருத்த முறையில் எளிமையாக திருமணம் நடந்தது. அந்த இனிய தம்பதிகளுக்கு நாங்கள் செல்வங்களாகப் பிறந்ததைப் பாக்கியமாகக் கருதுகிறோம். எங்க குடும்பம் ரொம்பப் பெரிசு. நிறைய பேரு வியந்து பாராட்டும் குடும்பம். அப்பா எங்க எல்லோரையும் நல்லா படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

Sivaji with his sons

எங்கள் அன்னை இல்லத்தின் மேல் ஒரு சிறுவன் கையில் புத்தகத்தை வைத்துப் படிப்பதைப் போல் ஒரு சிலையை வைத்தார். என்னையும் என் தம்பி பிரபுவையும் பெங்களூருவில் படிக்க வைத்தார். அதனால் அப்பாவை பள்ளி விடுமுறையின் போது தான் பார்ப்போம். தசராவுக்கு 10 நாள் லீவு. அப்போ போய் பார்ப்போம். அவரோடு டின்னர் சாப்பிடுவோம்.

வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்னையில் இங்கிலீஷ் படங்கள் நிறைய ரிலீஸாகும். பசங்களை நைட் ரெடியா இருக்கச் சொல்லு இங்கிலீஷ் படத்துக்குப் போகணும் என்பார். படம் பார்த்து மறுநாள் அதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டும். பெங்களூர்ல படிக்கும்போது அப்பா படங்கள் ரிலீஸாகும்.

நண்பர்களுடன் சேர்ந்து தியேட்டரில் க்யூவில் நின்று டிக்கெட் வாங்கிப் படங்களைப் பார்ப்பேன். எல்லோர் வீட்டிலும் அப்பா குழந்தைகளைக் கட்டித் தழுவிக் கொண்டு மகிழ்வார்கள். அது மாதிரி அப்பா என்னைக் கொஞ்சியதே இல்லை. சந்தர்ப்பமும் கிடைக்கல. அப்பா எல்லோரையும் எளிதில் நம்பி விடுவார்.

பிரபு தந்தை சிவாஜியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். அப்பா இல்லாத அன்னை இல்லம் வீடாகவே தெரியலை. எங்க அம்மா கொடுக்குற தைரியத்துல தான் இருக்கிறோம். அம்மா அடிக்கடி சொல்வாங்க. அப்பா சொல்லுவாராம்.

கமலா நான் இல்லேன்னாலும் இந்த வீடு நல்லபடியா இருக்கணும். நீதான் பசங்களை எல்லாம் தைரியம் கொடுத்து பார்த்துக்கணும் என்று. அப்பாவைப் பொறுத்தவரை மத்தவங்களுக்கு நிறைய உதவி பண்ணிருக்காரு. எனக்கு தெரிஞ்சு எத்தனையோ பேருக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு.

Prabhu

தன் குடும்பத்துக்காகப் பயப்படுவார். மானத்துக்காகப் பயப்படுவார். பல பேரு அவரைப் பாராட்டுவாங்க. அப்பாவைப் பற்றி ஒவ்வொருத்தரும் புகழ்றாங்க. எனக்கு உண்மையிலேயே ஆண்டவன் சக்தி கொடுத்தார்னா வானத்தைப் பொத்துக்கிட்டுப் போய் அப்பா நாங்கள் எல்லாம் எவ்வளவு அன்பா இருக்கோம்.

உங்களை ரொம்ப மிஸ் பண்றோம். அப்படின்னு கண்டிப்பா சத்தம் போட்டுச் சொல்வேன். எங்களை விட எத்தனையோ பேர் அவர் மீது அன்பை வச்சிருக்காங்க. இது இருக்குற வரை அவர் எங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top