×

எந்த உடையில் நான் அழகு... ரசிகரிடம் கெஞ்சும் ரம்யா!

டிவி ரியாலிட்டி ஷோக்களில் வி.ஜேயான ரம்யா சுப்பிரமணியன் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர்.  ‘கேம் ஓவர்’ மற்றும் ‘ஆடை’ உள்ளிட்ட  படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். லாக்டவுனுக்குப் பிறகு வெளிவர உள்ள தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்துள்ளார் ரம்யா.

 

சமீபத்தில், ரம்யா ‘லஜ்ஜாவதியே’ என்ற புகழ்பெற்ற பாடலுக்கு அபிநயித்து ஒரு டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில்,சிறப்பான விஷயம்  என்னவென்றால், மூன்றுவிதமான உடையில்  இந்த வீடியோவில் ரம்யா காணப்படுகிறார். தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் என ஒவ்வொரு மொழியிலும் இந்தப் பாடலின் வரிகளை ஒலிக்கச் செய்து, அதற்கு ஏற்றவகையில் டான்ஸ் ஆடுகிறார் ரம்யா.

இந்த டிக் டாக் வீடியோவுக்கு கேப்ஷனாக- தெலுங்கா, மலையாளமா இல்லை தமிழா, இதில் எது உங்கள் சாய்ஸ் என்று கேட்டுள்ளார். இந்த மூன்று உடைகளிலுமே ரம்யா அழகாக இருப்பதாக ரசிகர்கள் பதில் சொல்லி இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News