படையப்பா ரிலீஸ்... தலைமறைவான ரம்யா கிருஷ்ணன் - தியேட்டரில் நடந்த சம்பவம்!

 
rajini padaiyappa

படையப்பா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பட கெரியரிலே மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது படையப்பா திரைப்படம். 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

rajinikanth

இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன் சொல்லிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அற்புதமான கதைகளத்தில் இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இன்றளவும் இந்த திரைப்படம் மக்கள் மனதில் நீங்காத இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

நீலாம்பரி: 

இந்த திரைப்படத்தில் நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். ரஜினிக்கு ஈடாக கிட்டத்தட்ட ரஜினிக்கு அதிகமாக அளவில் பேசப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன். அந்த அளவுக்கு அவரது நடிப்பு அபாரத்தனமாக இருந்தது.

ramya krishnan

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நீலாம்பரி கதாபாத்திரம் குறித்து பேசி இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நான் இந்த கதாபாத்திரத்தில் நடித்த உடனே அந்த படத்துல ஒர்க் பண்ண அசிஸ்டன்ட் டைரக்டர் எல்லாருமே நீங்க கொஞ்ச நாளைக்கு படம் வெளியாகும் போது சென்னையில் இருக்காதீங்க ஊரவிட்டு கிளம்பிடுங்க அப்படின்னு எனக்கு சொன்னாங்க .

தலைமறைவான ரம்யாகிருஷ்ணன்:

அந்த அளவுக்கு நான் ரஜினியோட வில்லியாக நடித்து இருப்பேன். அது மட்டும் இல்லாம படம் ரிலீஸ் ஆன சமயத்தில் அவங்க எதிர்பார்த்த மாதிரி நான் சென்னையில் இல்ல வேற இடத்துல தான் இருந்தேன். அந்த நேரத்தில் படம் ரிலீஸ் ஆகும்போது என்னோட காட்சி எல்லாம் பார்த்து படத்தோட ஸ்கிரீன் எல்லாம் கிழிச்சு தொங்கவிட்டு அடிதடி நடந்துச்சு அப்படின்னு கூட நான் கேள்விப்பட்டேன் அந்த அளவுக்கு ரஜினியின் ரசிகர்கள் மிகவும் உணர்வுபூர்வமா படையப்பா படத்தை பார்த்து ரசித்தார்கள். 

Tags

From Around the web