Categories: latest news television

கமலுக்கு பதில் பிக்பாஸை நடத்தப்போவது இவர்தானாம்!.. அப்ப சும்மா களைகட்டும்….

விஜய் தொலைக்காட்சியில்தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் தமிழ் தற்போது 5வது சீசனை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்காதவர்கள் கூட அவர் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

Bigg Boss 5

கமலுக்கு தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்கள் அவரால் நிகழ்ச்சியை நடத்த முடியாது. எனவே, அவருக்கு பதில் அவரின் மகள் ஸ்ருதிஹாசன் இந்நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக செய்திகள் வெளியானது.

shruthi

அதன்பின் ஸ்ருதிஹாசன் நடத்தப்போவது இல்லை எனவும் விஜய் சேதுபதி மற்றும் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த செய்தியிலும் உண்மையில்லை என்பது பின்னர் தெரியவந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்துவார் எனவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், கமல்ஹாசன் வரும் வரைக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை நடத்துவார் என தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி ஏறக்குறைய உண்மைதான் எனத்தெரிகிறது. ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் எனும் நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா