×

ரசிகர்கள் கேள்வியை அதிரடி பதிலால் ஆப் செய்த ரம்யா

தொகுப்பாளினி ரம்யாவிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வைரலாகி வருகிறது. 
 

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. கொஞ்சும் தமிழிலால் மக்களை தன் பக்கம் ஈர்த்தவர். விஜய் தொலைக்காட்சியில் பல வருடமாக ஷோ செய்து வந்தார். சமீபகாலமாக எந்தவித தொலைக்காட்சியிலும் தோன்றாமல் ஒரு ப்ரேக்கில் இருக்கிறார். டிவிக்கு தான் ப்ரேக் என்றாலும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக தான் இயங்கி கொண்டு இருக்கிறார். 

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு ரம்யா பதில் அளித்து கொண்டு வந்தார். அதில் ஒரு ரசிகர் உங்களை கல்யாணம் பண்ணணும் எனக் கேள்வி கேட்க, ரம்யாவோ அசராமல் பதில் அளித்தார். 2021 ஆரம்பமே அமர்க்களமா இருக்கு நன்றி வணக்கம் என முடித்து கொண்டார். இப்பதில் தற்போது வைரலாகி வருகிறது. எதற்குமே டென்ஷனாகாமல் கூலாக பதில் அளிக்கிறார் ரம்யா என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். 

ரம்யாவிற்கு சில வருடம் முன்னர் திருமணம் நடந்தது. ஆனால், 10 நாட்களுக்குள் தம்பதிகள் தங்களுக்கு ஒத்து வராது எனத் தெரிந்து பிரிந்தனர். பின்னர் முறையாக விவாகரத்து பெற்றுக் கொண்டோம் என சமீபத்தில் தான் ரம்யா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News