வெள்ளித்திரையில் ஜொலிக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் படு ஃபேமஸாக வளர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர். அண்மையில் கூட வெளிவந்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்திலும் ஒரு கிராமத்து பெண்ணாக அசத்தியிருப்பார்.
இவர் ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலக்கபோவது யாரு போன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிக்ழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதனிடையே தற்போது பிக்பாஸ் அல்டமேட் நிகழ்ச்சியில் ஒய்ல்டு கார்டு என்டிரியானார். அப்போது வீட்டிற்குள் ஒரு டாஸ்கில் ரம்யா மீது ஜூலி தெரியாமல் கீழே விழுந்து உட்காந்து விட்டார். இதனால் ரம்யாவின் காலில் முறிவு ஏற்பட்டது. அவரால் நடக்கக்கூட முடியாமல் வீல்சேரில் உட்காந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் என்பதால் அவர் வெளியேறுவாரா இல்லை இன்னும் வரும் நாட்களில் நிகழ்ச்சியில் தொடருவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…