×

சூர்யா படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி இருக்கும் ரம்யா பாண்டியன் சூர்யா படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
 
 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாலி நிகழ்ச்சியில் கிடைத்த புகழுடன் உள்ளே சென்றார். அவர் தான் டைட்டில் வின்னர் என போட்டியாளர்களே நினைக்கும் அளவுக்கு சர்ச்சையில் சிக்காமல் வலம் வந்தார். ஆனால் அவரையும் இக்குழு விட்டு வைக்கவில்லை. சில போட்டியாளர்கள் வெளியேறிய போது சிரித்து வைத்தது, கிண்டல் செய்தது என அவரை விஷ பாண்டியன் என ட்ரோல்கள் றெக்கை கட்டியது. டைட்டில் வின்னரான ஆரியுடன் இவருக்கு கடைசி வரை சரியான புரிதல் ஏற்படவே இல்லை.

கடைசி பெண் போட்டியாளராக வெளியேறினார் ரம்யா பாண்டியன். கடைசி டாஸ்கில் பல மணி நேரம் கயிறை பிடித்து நின்று பலராலும் சிங்கப் பெண்ணாக புகழப்பட்டார். இது அவரின் மீதான சில நெகடிவ் கமெண்ட்களை துடைக்க பயன்பட்டது.

இந்நிலையில், தனது படம் குறித்து ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கும் இப்படம் ஹீரோயினை மையமாக கொண்டு உருவாக இருக்கிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News