">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ரம்யா பாண்டியன் உண்மையாக இருக்கிறார் – பாராட்டிய நடிகை
ரம்யா பாண்டியன் உண்மையாக இருக்கிறார் – பாராட்டிய நடிகை
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 4வது சீசனை எட்டியுள்ளது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
தற்போது துவங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி எல்லோருடனும் மோதல் போக்கை கடை பிடித்து வருகின்றனர். அவர் பேசும் விதம் கோபத்தை ஏற்படுத்துவதால் அவருடன் மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டு வருகின்றனர்.
எவிக்ஷன் ஃப்ரீ பாஸை எப்படியாவது தான் அடையவேண்டும் என சுரேஷ் போட்ட திட்டத்தை ரம்யா பாண்டியன் திறமையாக முறியடித்தார். அதன்பின் அந்த பாஸை ஆஜித்துக்கு கொடுத்து ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், நடிகை ஸ்ரீபிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ ரம்யா பாண்டியன் உண்மையாக இருக்கிறார்’ என பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் அனைத்து சீசன்களை பார்த்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர் ஸ்ரீபிரியா என்பது குறிப்பிடத்தக்கது.
Appreciate Ramya’s genuinity
— sripriya (@sripriya) October 13, 2020