×

தியேட்டர் வாசல்ல நோட்டீஸ் கொடுத்தேன்... பிரபல நடிகை!

கடந்த சில நாட்களாக அனைவரையும் சோகக்கடலில் ஆழ்த்திய தாங்கள் கடந்து வந்த பாதை  டாஸ்க் ஒருவழியாக நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடைசி நாளான நேற்று ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ், சோமசேகர், ஆஜீத் ஆகிய நால்வரும் தங்களது கடந்த கால வாழ்க்கையை பகிர்ந்து கொண்டனர்.
 

இதில் பிக்பாஸின் வீட்டின் முதல் கேப்டனான ரம்யா பாண்டியன் தன்னுடைய வாழ்க்கையை எந்தவொரு அழுகையும் இல்லாமல் தெளிவாக பகிர்ந்து கொண்டார். அப்பா பாம்பு கடித்து இறந்தது, சென்னைக்கு வந்தது, படங்களில் நடிக்க பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் அவர் இயல்பாக பகிர்ந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சத்யம் தியேட்டர் வாசலில் நின்று pamphlet கொடுத்தது தான் தன்னுடைய முதல் வேலை என்று தெரிவித்த அவர், ஆரம்பத்தில் கொஞ்சம் வெட்கமாக இருந்தது ஆனால் இதற்குத்தான் சம்பளம் கொடுக்கிறார்கள் என தன்னை சமாதானம் செய்து கொண்டதாக தெரிவித்தார். திருநெல்வேலியை சேர்ந்த ரம்யா ஆண் தேவதை, ஜோக்கர் படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News