×

கணவர் என்னை அடித்து கொடுமைபடுத்துகிறார்... ரம்யாவிடம் நேரலையில் கதறிய ரசிகை...

டெலிவிஷனில் மிகவும் பிரபலமான விஜேவாக திகழும் விஜே ரம்யா, அண்மையில் சமுத்திரகனி, கருணாஸ் நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான சங்கத்தலைவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
DSC02610-48

டெலிவிஷனில் மிகவும் பிரபலமான விஜேவாக திகழும் விஜே ரம்யா, அண்மையில் சமுத்திரகனி, கருணாஸ் நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான சங்கத்தலைவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் தமது கதாபாத்திரத்துக்காக வரவேற்பைப் பெற்ற ரம்யா, தொடர்ந்து தமது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அப்படி ஒரு சூழலில் தமது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய விஜே ரம்யா, “இன்னைக்கு நாள் எப்படி போச்சு?” என அவர்களிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பலவிதமான பதில்கள் வந்தவண்ணம் இருந்துள்ளன. அப்போது ரசிகை ஒருவர், தன்னை தினமும் தன் கணவர் தன்னை அடிப்பதாகவும், தான் அதனால் தன் திருமண வாழ்க்கையை தான் முடித்துக் கொள்ளப் போவதாகவுன் தெரிவித்ததுடன், எல்லா பெண்களும் எழுச்சி பெறுங்கள் என கூறியுள்ளார்.

இதனால் எமோஷனல் ஆன ரம்யா,  “இந்த மாதிரி பிசிக்கல் மற்றும் மெண்டல் பலவந்தங்கள் நிறையவே நடக்கின்றன. உங்களுக்காக நிறையவே வருந்துகிறேன். பணிச்சுமை இருந்தாலோ, பிசிக்கல் மற்றும் மெண்டல் தாக்குதல்கள் சீண்டல்கள் இருந்தாலோ, தனிமையாக ஃபீல் பண்ணினாலோ உங்களுக்கு நம்பிக்கையானவர்களை அணுகுங்கள். தயவுசெய்து உங்களுக்குள்ளேயே வெச்சுக்காதீங்க!” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலர் கொரோனாவினால் சந்திக்கும் இக்கட்டான சூழல்கள் மற்றும் அன்றைய நாள் எப்படி போனது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விஜே ரம்யாவுடன் பகிர்ந்துகொண்டனர். விஜே ரம்யாவின் ரசிகர்களுடனான நேரலை வீடியோவை இணைப்பில் காணலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News