விமர்சனம் எப்படி இருந்தா என்ன?.. ஆனாலும் வசூலில் கெத்து காட்டும் ரணபாலி

விஜய்  தேவரகொண்டா, ராஷ்மிகா  நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம்  ரணபாலி
 
ranabali movie

விஜய்  தேவரகொண்டா, ராஷ்மிகா  நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம்  ரணபாலி . ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், வெளியான நாள் முதலே கலவையான விமர்சனங்களை பெற்ர்று வருகிறது. குறிப்பாக படத்தின் சுவாரஸ்யமில்லாத திரைக்கதை மற்றும் சில காட்சிகளின் நீளம் குறித்து  விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

1876–1878 காலகட்டத்தில் ஏற்பட்ட மெட்ராஸ் பெரும் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒடுக்குமுறையை எதிர்த்து தனது மக்களுக்காக போராடும் சிங்கனமலா பொப்பிலி ரணபாலி என்ற வீரனாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். அவரது மனைவி ஜெயம்மாவாக ராஷ்மிகா நடித்துள்ளார். பிரிட்டிஷ் அதிகாரியான சர் தியோடர் ஹெக்டர் கதாபாத்திரத்தில் அர்னால்டு வாஸ்லூ நடித்துள்ளார்

இந்த நிலையில், படத்தின் தற்போதைய வசூல் விவரமும் வெளியாகியுள்ளது.  ரணபாலி முதல் 4 நாட்களில் உலகளவில் ரூ.43.85 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் ரூ.34.35 கோடி Gross மற்றும் வெளிநாடுகளில் ரூ.9.50 கோடி வசூல் பதிவாகியுள்ளது. இந்திய Net வசூல் ரூ.29.45 கோடியாக உள்ளது. 

From Around the web