பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம் ரணபாலி. வரலாற்று பின்னணியில் உருவான இப்படம்
 
ranabali movie

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம் ரணபாலி. வரலாற்று பின்னணியில் உருவான இப்படம், திரையரங்குகளில் தனது முதல் வாரத்தை நிறைவு செய்துள்ளது. 1870-களில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த தாது வருடப் பஞ்சத்தின் பின்னணியையும், மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடும் ஒரு புரட்சியாளனின் கதையையும் மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் சாங்க்ரித்யன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வோஸ்லோ முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 முதல் நாளில் நல்ல வரவேற்புடன் தொடங்கிய போதிலும், வார நாட்களில் படத்தின் வசூலில் கடுமையான சரிவு காணப்படுகிறது. 7-வது நாளில் இந்தியாவில் சுமார் 2,112 காட்சிகளில் திரையிடப்பட்ட இப்படம், வெறும் ரூ.3.15 கோடி மட்டுமே நெட் வசூலாகப் பெற்றுள்ளது. இது அதற்கு முந்தைய 6-வது நாளின் வசூலோடு ஒப்பிடும்போது சுமார் 42.7 சதவீத சரிவாகும். இதன்மூலம் இந்தியாவில் 7 நாட்களில் படத்தின் மொத்த நெட் வசூல் ரூ.45.20 கோடியாகவும், மொத்த கிராஸ் வசூல் ரூ.52.55 கோடியாகவும் பதிவாகியுள்ளது. வெளிநாடுகளில் 7-வது நாளில் ரூ.35 லட்சம் வசூலானதைத் தொடர்ந்து, ஓவர்சீஸ் மொத்த கிராஸ் வசூல் ரூ.11.10 கோடியை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் வார முடிவில் உலகளவில் இப்படம் ரூ.63.65 கோடி கிராஸ் வசூலை பதிவு செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அக்காலகட்ட பஞ்சத்தின் பின்னணியை துணிச்சலாகப் பதிவு செய்த விதம், பிரம்மாண்டமான கலை இயக்கம், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையிலான இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை படத்திற்குப் பலமாக பார்க்கப்படுகின்றன. இருப்பினும், இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகம் குறைந்து அதீத வன்முறையும் சண்டைக்காட்சிகளும் திணிக்கப்பட்டிருப்பதாகவும் ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

Tags

From Around the web