காலா படம் போதே பக்கா பிளானில் இருந்தார் - ரஜினி முடிவு பற்றி ரஞ்சித் பேட்டி
Thu, 31 Dec 2020

பல வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறி வந்த ரஜினி சமீபத்தில்தான் டிச 31ம் தேதி கட்சி பற்றி அறிவிப்பேன் என கூறினார். ஆனால், உடல் நிலையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி அறிவித்துவிட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் பா. ரஞ்சித் ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவை எடுத்தது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில், அரசியலுக்கு வருவதற்கான எல்லா திட்டங்களையும் காலா படப்பிடிப்பின் போது அவர் வைத்திருந்தார்’என தெரிவித்துள்ளார்.