×

துளி மேக்கப் இன்றி பக்கத்து வீட்டு பொண்ணு போல் பாட்டு பாடும் ராஷி கண்ணா!

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'அருவா' படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க விருக்கிறார். மேலும் அரண்மனை 3, தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் மாட்டிக்கொண்டு லாக்டவுனில் தனக்கு பிடித்த சில பொழுதுபோக்காக விஷயங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளி கூட மேக்கப் போடாமல் கிட்டார் இசைத்து பாடல் பாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு " "பாடுவது எனது மகிழ்ச்சியான ஒன்று. இது எனக்கு மிகவும் பிடித்த தெலுங்கு பாடல்களில் ஒன்றாகும் !! ..சித் ஸ்ரீராமின் மந்திரக் குரல் எப்போதும் என் முகத்தில் ஒரு புன்னகையைத் தருகிறது! எனவே இதைப் பாடி உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன்." என கூறி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் ..

From around the web

Trending Videos

Tamilnadu News