நான் வாங்குன முதல் லவ் லெட்டர்... வெட்கத்தில் சிவந்த ராஷி கன்னா

தமிழ், தெலுங்கில் பிஸியாக வலம் வரும் ராஷி கன்னா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக இருப்பவர். இவர் சமீபத்தில் காதல் கடிதம் குறித்து பேசியிருக்கிறார். ராஷிகன்னா கூறுகையில், ``நான் காலேஜ் படிக்கும்போது சீனியர் ஒருவர் என்னைத் துரத்தி துரத்தி காதலித்தார். கையில் காதல் கடிதத்தோடு நான் இருக்கும் இடங்களுக்குப் பின்தொடர்ந்து வந்துவிடுவார். அவரிடம் இருந்து எப்படியாவது நானும் தப்பி விடுவேன்.
ஒருநாள் வசமாக நான் மாட்டிக்கொண்டேன். ஆரம்பத்தில் இருந்தே அந்தப் பையனை எனக்குப் பிடிக்காது. ஒருநாள் என் கையில் லவ் லெட்டரைத் திணித்துவிட்டுப் போய்விட்டார். கூடவே ஒரு ரோஸையும் கொடுத்தார். அந்த லெட்டரைப் படிக்கவே எனக்கு மனசில்லை. ஒருவழியாகத் திறந்து படித்தேன்.
அதில், என்னை ரொம்பவே வர்ணித்து எழுதியிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு முன் என்னைக் குறித்து யாரும் அவ்வளவு அழகாக வர்ணித்தது கிடையாது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் காட்டியதும் அவரும் அதைத்தான் சொன்னார். `உனக்கு அந்தப் பையனைப் பிடிக்குமா’னு அம்மா கேட்டாங்க. நான் இல்லைனு சொல்லிட்டேன். இப்போ அந்தப் பையன் எங்கிருக்கார்னு தெரியலை’’ என்று ஓப்பனாகப் பேசியிருக்கிறார்.
F.O.C.U.S
— Raashii Khanna (@RaashiKhanna) October 20, 2020
Where focus goes, energy flows.. 🤍 pic.twitter.com/kw8UGPGptC