×

ராஷ்மிகாவின் சவாலை ஏற்று மூன்று டாப் நடிகைகளை டார்கெட் செய்த ராஷி கண்ணா!

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'அருவா' படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க விருக்கிறார். மேலும் அரண்மனை 3, தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் கிரீன் இந்தியா சேலஞ்ச் ஏற்று நாகர்ஜுனா , சமந்தா , ராஷ்மிகா மந்தனா உள்ளட்ட நடிகர் , நடிகைகள் வீட்டில் 3 மரங்களை நட்டு இதை ஒரு சங்கிலி போல் பின் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்தவகையில் சமந்தா மென்சன் செய்த மூன்று நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா வீடு தோட்டத்தில் மரம் நட்ட வீடியோவில் அவர் குறிப்பிட்ட நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. எனவே இந்த சேலஞ்சை ஏற்ற ராஷி கண்ணா காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் சிங், தமன்னா உள்ளிட்ட மூன்று நடிகைகளை நாமினேட் செய்துள்ளார். ஒரு சங்கிலி கோர்வையாக நடைபெற்று வரும் இந்த கிரீன் இந்தியா சேலஞ்சிற்கு பலதரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News