rashmika mandhana
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அம்மணியின் க்யூட் எக்ஸ்பிரசனில் ஆந்திராவே சொக்கி போய் கிடக்கிறது. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’படத்தில் இவர்தான் கதாநாயகி. இப்படத்தில் இடம்பெற்ற‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை சுண்டி இழுத்து ஹிட் ஆனது.
இப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியானதால் இந்திய சினிமா ரசிகர்களிடையே ராஷ்மிகா பிரபலமாகியுள்ளார். எனவே 2 கோடியாக இருந்த தனது சம்பளத்தை அம்மணி ரூ.4 கோடியாக ஏற்றிவிட்டார்.
இந்நிலையில், தெலுங்கில் ராம்சரணை வைத்து தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் 30 நிமிடம் மட்டுமே வரும் ஒரு பத்திரிக்கையாளர் வேடத்தில் அவரை நடிக்க வைக்க ஷங்கர் விரும்பினார்.
அதற்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டு அதிர வைத்துள்ளார் ராஷ்மிகா. ஆனாலும், அப்படமும் பேன் இண்டியா படம் என்பதால் அந்த தொகையை கொடுக்க தயாரிப்பாளர் தரப்பு முன் வந்துள்ளதாம்!…
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…