27 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் ராதிகா!..
குட் பேட் அக்லி வெற்றிக்கு பின் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் டேர்டெவில். அஜித் மனைவி ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசயமைக்கும் இப்படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தில் பிரபல நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் - ராதிகா இருவரும் கடைசியாக 1999ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதற்கு முன்பு அஜித்தின் ஆரம்பகால திரைப்படங்களில் ஒன்றான பவித்ரா படத்தில் அவருக்கு அம்மாவாக ராதிகா நடித்திருந்தார். இந்நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

டேர்டெவில் படத்தில் கதையின் திருப்புமுனைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் ராதிகா நடிப்பதாகக் கூறப்படுகிறது. திரைக்கதை எழுதும்போதே இந்தக் கதாபாத்திரத்தில் ராதிகாதான் நடிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதியாக இருந்தாராம். ராதிகாவை அணுகியபோது அவர் ஏற்கெனவே பல்வேறு பணிகளில் பிஸியாக இருந்துள்ளார். இருப்பினும், இந்த வாய்ப்பைத் தவறவிட விரும்பாத ராதிகா, தனது கால்ஷீட்டை மாற்றியமைத்து இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
