ரஜினிகாந்த் படமே கிடைத்தாலும்!.. இன்ஸ்டா ரசிகர்களை பட்டினிப்போடாத ராஷி கண்ணா!..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்மன் படத்தில் நடித்து வரும் நடிகை ராஷி கண்ணா, தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ராஷி கண்ணா, ‘மெட்ராஸ் கஃபே’ எனும் இந்தி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும், தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் பிரபலமான ராஷி கண்ணா, அடங்கமறு, அரண்மணை 3 மற்றும் 4, துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘தர்மன்’ திரைப்படத்தில் செம டிரெண்டியான ரோல் என்பதால் தான் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி குயினாக மாறி வருகிறார் என்கின்றனர். இப்படம் 2027-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியிலும் ராஷி கண்ணாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஃபர்ஸி 2, லுக்கே உள்ளிட்ட இந்தி வெப்சீரிஸ்களிலும் அவர் நடிக்கவுள்ளார்.

ஜெயிலர் படத்தில் தமன்னா காவாலா பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். அதே போல அரண்மனை 4 படத்தில் தமன்னாவுடன் இணைந்து ராஷி கண்ணா அச்சச்சோ பாடலுக்கு எக்குத்தப்பாக ஆட்டம் போட்டார். இந்நிலையில், தர்மன் படத்திலும் ராஷி கண்ணாவின் கிளாமர் டான்ஸ் கன்ஃபார்ம் என்கின்றனர்.