ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை மயக்கிய ராஷி கன்னா... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
நடிகை ராஷி கன்னா, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர், தற்போது வெளியிட்டுள்ள புதிய கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

மாடலிங் துறையின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய ராஷி கன்னா, பின்னர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு', 'அயோக்யா', 'சர்தார்', 'அரண்மனை 3', 'திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தனது இயல்பான நடிப்பு, கவர்ச்சியான திரை தோற்றம் மற்றும் பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் திறமையால் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது ராஷி கன்னா, நடிகர் ரஜினிகாந்துடன் 'தர்மன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'தர்மன்' திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், ஸ்டைலிஷ் தோற்றத்தில் வெளியான ராஷி கன்னா புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். "கார்ஜியஸ்", "பியூட்டிஃபுல்", "குயின்" என பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
