×

நான் 2 கோடி சம்பளம் கேட்டால் தயாரிப்பாளர்கள் கூட தரமாட்டார்கள்... ஏன்யா கிளப்பிவிடுறீங்க

ஐடி ரெய்டில் சிக்கியது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
 
 

திரையுலகில் தற்போதைய ஹிட் நடிகைகளில் முக்கியமானவர் ராஷ்மிகா மந்தனா.  கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமான ராஷ்மிகாயை பலருக்கு அடையாளம் காட்டியது கீதா கோவிந்தம் படம் தான். அப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகாவின் நடிப்பு செம கெமிஸ்ட்ரியில் அள்ளியது. 
மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் கம்ரேட்’, மகேஷ் பாபுவுடன்  ‘சரிலேரு நீக்கெவரு’ படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.

இதை தொடர்ந்து, ராஷ்மிகாவின் பெங்களூரு வீட்டில் கடந்த ஜனவரி 16ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்த சோதனை குறித்து முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா பேசி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் சம்பளத்தை நான் ரூ 2 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல்கள் பரவியது. அது தான் வருமானவரி சோதனைக்கு முக்கிய காரணம். ஆனால், நான் அவ்வளவு சம்பளம் எல்லாம் வாங்கவில்லை. அந்த தொகையை கேட்டாலும் தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள். ஹீரோவுக்கே அவ்வளவு சம்பளமெல்லாம் தருவது இல்லை. எனக்கு எப்படி தருவார்கள். நான் ஐதராபாத்தில் புது வீடு வாங்கியது உண்மை தான். என்னை பற்றி வரும் கிசுகிசுக்களை நான் இப்போது கண்டுகொள்வது இல்லை’’ என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News