ராக்கா படத்தில் செம கேரக்டரில் ராஷ்மிகா!.. அல்லு அர்ஜூனுக்கு வில்லியா?!..
Oct 27, 2026, 14:26 IST
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் திரைப்படம் ரக்கா. ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்களோடு இணைந்து இந்த படத்தை உருவாக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தில் ஏற்கனவே தீபிகா படுகோனே, மிருனள் தாக்கூர், ஜான்வி கபூர் உள்ளிட்ட சிலர் நடித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ராஷ்மிகாவுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. அனேகமாக அட்லி தனது சகோதரி என நினைக்கும் நயன்தாராவும் ராக்கா படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. ராக்கா திரைப்படத்திற்கு பின் அல்லு அர்ஜூன் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
