நடிகை பற்றி பதிவிட்ட முன்னாள் காதலன்... கிண்டல் செய்யும் நெட்டீசன்கள்? அப்படி என்ன சொல்லிட்டாரு
நடிகை ரஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய அளவில் அறிய படும் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார். கன்னடம், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்குகிறார்.
Mon, 28 Dec 2020

இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் அறிமுகமாக உள்ளார், இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் முன்பே ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகி விட்டார் என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகரும் நடிகை ரஷ்மிகாவின் முன்னாள் காதலருமான ரக்ஷித் ஷெட்டி, ட்விட்டரில் ரஷ்மிகா குறித்து "மேலும் மேலும் நீ வளர வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் அவரின் அந்த பதிவை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்,
nullGrow grow and grow girl. May all your dreams come true ☺️🤗 https://t.co/WVm6BM4smk
— Rakshit Shetty (@rakshitshetty) December 25, 2020