அந்த விசயத்தில் நயன்தாராவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. 2005ம் ஆண்டு ஐயா படம் மூலம் அறிமுகம் ஆன அவர் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது கவின் போன்ற இளம் ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் ஹீரோயினாக தன்னை தக்கவைத்துகொண்டிருக்கிறார் இவர்.
நயன்தாரா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சல்மான்கானுடன் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அந்த படத்திற்காக அவர் ரூ 10 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. தென்னிந்திய நடிகைகளில் இதுவே அதிக சம்பளமாக கருதப்பட்டது. ஆனால் அந்த சாதனையை முறியடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில் காக்டெய்ல் 2 என்ர படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவ்ருக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்திய நடிகைகளில் ராஷ்மிகா அதிக சம்பளம் வாங்கிய நயனின் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
.
