ராஷ்மிகாவுக்கு இப்படி ஒரு தங்கையா? அதுவும் இந்த வயசிலயா? ஆச்சரியமா இருக்கே

by Rohini |   ( Updated:2025-02-26 14:43:40  )
rashmika
X

ராஷ்மிகாவுக்கு ஒரு தங்கை இருக்கிறாராம். அவருக்கும் ராஷ்மிகாவுக்கும் 16வயது வித்தியாசமாம். இவர்தான் அக்கா என்று சொல்லாமலேயே இருவரும் வளர்ந்திருக்கிறார்கள். இது உன்னுடைய வாழ்க்கை. இதில் எங்களை ஈடுபடுத்தாதே என ராஷ்மிகாவின் பெற்றோர்கள் அடிக்கடி கூறுவார்களாம். ராஷ்மிகாவின் தங்கையை பொறுத்தவரைக்கும் இப்போது என்ன வேண்டுமானாலும் எளிதில் கிடைக்கும்.

அந்தளவுக்கு செல்வ செழிப்போடு தான் இருக்கிறார்கள். ஆனால் ஆரம்பகாலங்களில் ராஷ்மிகாவுக்கு அப்படி இல்லையாம். அதனால் இவர் தங்கைக்கும் எதுவும் ஈஸியாக கிடைக்கக் கூடாது என ராஷ்மிகா நினைப்பாராம். ஏனெனில் ராஷ்மிகா இந்த நிலைமைக்கு வளர்ந்ததற்கு காரணம் அப்படிதான் அவரும் வளர்க்கப்பட்டாராம். அதனால் அவருடைய தங்கையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என ராஷ்மிகா நினைக்கிறாராம்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது ஆனதும் தன் தங்கைக்கு உரிய நிறைய பாதுகாப்பு மற்றும் ஆதரவுகளை கொடுப்பேன் என ராஷ்மிகா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. வேர்ல்ட் கிரஷ் என்றுதான் ராஷ்மிகாவை அனைவரும் அழைத்துவருகிறார்கள். அவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் அனைவரையும் வெகுவாக கவரும் வகையில் இருக்கும்.

தெலுங்கில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தமிழ், ஹிந்தி என அதிலும் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். தமிழில் விஜயுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு புஷ்பா படத்திலும் நடித்து ஒரு பேன் இந்திய நடிகையாகவே மாறினார் ராஷ்மிகா. இப்போது பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.




இந்த நிலையில்தான் இவருக்கு ஒரு தங்கை இருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. அதுவும் இருவருக்கும் 16 வயது வித்தியாசம் எனும் போது அனைவருக்குமே ஷாக்காகி விட்டது. இதுவரை ராஷ்மிகாவின் குடும்பத்தை பற்றிய எந்தவொரு செய்தியும் வெளிவராத நிலையில் அவருடைய தங்கை பற்றிய செய்தி வைரலாகி வருகின்றது.

Next Story