×

மறுபடியும் காதலில் விழுந்த ராஷ்மிகா.. இந்தமுறை யாருடன் தெரியுமா..?

மொழி பாகுபாடின்றி ரசிகர்கள் ஆதரிக்கும் ஒரே விஷயம் சினிமாதான். அதிலும் குறிப்பாக பிற மொழி நடிகைகளுக்கு ரசிகர்கள் தங்கள் மனதில் தாராள இடம் கொடுத்து வரவேற்பார்கள். அந்தவகையில் தமிழுக்கு சமீபத்திய புதுவரவுதான் நடிகை ராஷ்மிக்கா மந்தனா.
 
Rashmika Mandanna

மொழி பாகுபாடின்றி ரசிகர்கள் ஆதரிக்கும் ஒரே விஷயம் சினிமாதான். அதிலும் குறிப்பாக பிற மொழி நடிகைகளுக்கு ரசிகர்கள் தங்கள் மனதில் தாராள இடம் கொடுத்து வரவேற்பார்கள். அந்தவகையில் தமிழுக்கு சமீபத்திய புதுவரவுதான் நடிகை ராஷ்மிக்கா மந்தனா.

கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. முதல் படமான கிரிக் பார்ட்டியில் நடித்தபோது அந்தப்பட நாயகன் ரிக்ஷித் ஷெட்டியுடன் காதலில் விழுந்தார். நிச்சயதார்த்தம் வரை சென்ற இவர்களது திருமணம் ஏனோ பாதியில் நின்றது.

Rashmika Mandanna
Rashmika Mandanna

பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். என்னதான் கன்னட  இவருக்கு ஆதரவு கொடுத்தது ஆதரித்தது என்னவோ தெலுங்கு சினிமாதான். தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் முதலில் நடித்த கீதா கோவிந்தம் என்ற படத்தில் ஒரே பாடலில் பேமஸ் ஆனார். 

'இன்கேம் இன்கேம்' என்ற அந்த பாடல் தனது இடுப்பை காட்டி தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார். இந்த பாடல்காட்சிக்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு உள்ளது. 

Rashmika Mandanna
Rashmika Mandanna

இந்த படத்தையடுத்து மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்ததால் அவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், இது காதல் எல்லாம் இல்லை வெறும் பிரண்ட்ஷிப்தான் என இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா, உடற்பயிற்சி செய்துவரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் மீண்டும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது.

Rashmika Mandanna
Rashmika Mandanna

From around the web

Trending Videos

Tamilnadu News