×

நான் ரொம்ப பிஸி... இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஆன ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, கன்னடம், தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். 
 
 

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்திருக்கும் சுல்தான் படம் ராஷ்மிகாவுக்கு முதல் தமிழ் படமாகும். அதேபோல், டாக்டர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விஜய்யுடன் இணையும் தளபதி 65 படத்தில் ஹீரோயின் ரேஸில் ராஷ்மிகா முன்னணியில் இருக்கிறார். 


கன்னடத்தில் அர்ஜூனின் உறவினரான துருவா சர்ஜாவுடன் இவர் இணைந்து நடித்த போகாரு படம் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழிலும் இந்தப் படம் திமிரு பிடிச்சவன் என்ற பெயரில் டப்பாகி வெளியானது. தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனுடன் இணைந்து புஷ்பா படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 


இந்தநிலையில், ராஷ்மிகா பாலிவுட்டில் அறிமுகமாகும் மிஷன் மஞ்சு படத்தின் ஷூட்டிங்  விரைவில் தொடங்க இருக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்காக ராஷ்மீகா பயங்கரமாகத் தயாராகி வருகிறார். புஷ்பா பட ஷூட்டிங் இடைவெளிகளில் மும்பை பறக்கும் ராஷ்மிகா, அங்கு பல வொர்க்‌ஷாப்புகளில் கலந்துகொண்டு மிஷன் மஞ்சு படத்துக்காகத் தயாராகி வருகிறாராம். 

From around the web

Trending Videos

Tamilnadu News