விட்டா விவகாரத்து பண்ணி வச்சிடுவீங்க போல.. போலி அக்கறை.. விளாசிய ராஷ்மிகா!..
நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னைப் பற்றியும் தனது திருமண வாழ்க்கையைப் பற்றியும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில பதிவுகளைப் பகிர்ந்துள்ளார்.
அதில் சில பெண்கள் என் மீது அக்கறை இருப்பது போல ரீல்ஸில் விஜய் தேவரகொண்டாவை விட்டுப் பிரிந்துவிட அறிவுரை கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கஷ்டப்பட்ட காலத்தில் இவர்கள் யாரும் என்னுடன் இல்லை, ஆனால் விஜய் அப்போது மட்டுமல்லாமல் இப்போதும் எனக்குத் துணையாக இருக்கிறார்.
https://t.co/X4x5ReNqOM
— Rashmika Mandanna (@iamRashmika) October 26, 2026
திருமணத்துக்குப் பிறகு நான் மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் இருக்கிறேன். எனவே, எனது வாழ்க்கையைப் பற்றி பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். உடல்நிலை சரியில்லாத நேரத்திலும், மனதளவில் சோர்வாக இருக்கும் போதும் விஜய் தனக்கு ஆதரவாக இருக்கிறார். மேலும், என்னை அன்புடன் பார்த்துக்கொள்ளும் கணவர் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, விஜய் தேவரகொண்டா தன்னைத் தூக்கிச் செல்லும் வீடியோவையும் ராஷ்மிகா பகிர்ந்துள்ளார். மேலும், பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் தன்னைக் விரும்பும் கன்னட ரசிகர்களுக்கு நன்றி, அனைவரும் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார். ராஷ்மிகாவின் இந்தப் பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
