×

இளைஞர்களுக்கு என்னைப் பிடிக்க இதுதான் காரணம்... தில்லாகச் சொல்லும் ராஷ்மிகா

நடிகர் கார்த்தியுடன் ராஷ்மிகா நடித்திருக்கும் சுல்தான் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 
 
இளைஞர்களுக்கு என்னைப் பிடிக்க இதுதான் காரணம்... தில்லாகச் சொல்லும் ராஷ்மிகா

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருக்கும் படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமாகும் இந்தப் படத்தில், 100 ரவுடிகளைச் சமாளிக்கும் கேரக்டரில் கார்த்தி நடித்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

ராஷ்மிகா குறித்து கார்த்தி பேசுகையில், `மிகவும் நேர்மையான நடிகை. கிராமத்துப் பெண் வேடத்துக்காகக் காத்திருந்து இந்தக் கதையில் நடித்திருக்கிறார். டைரக்டர் என்ன சொன்னலும் துணிச்சலாகச் செய்தார். டிராக்டர் ஓட்ட வேண்டும் என்று சொன்னால், ஓக்கே நான் செய்கிறேன் என உடனே அவர் தயாராகிவிட்டார்’ என்று புகழ்ந்திருக்கிறார். 

ராஷ்மிகா பேசுகையில், `மற்ற மொழிப் படங்களில் நடிக்கும்போது ஒருசில நாட்கள் லாங்குவேஜ் பிரச்சனை இருப்பது இயல்புதான். கன்னடம், ஹிந்தியில் சொந்தக் குரலில் பேசியிருக்கிறேன். வேலைன்னு வந்துட்டா என் கவனமெல்லாம் அதில்தான் இருக்கும். குடும்பம், நண்பர்கள் என்று கவனத்தைத் திசைதிருப்ப மாட்டேன். நான், நானாக இருப்பதால்தான் இளைஞர்களுக்கு என்னைப் பிடிக்கிறது’ என்று பேசியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News