×

சமந்தாவின் சவாலை ஏற்ற ராஷ்மிகா மந்தனா – லாக்டவுனில் செய்த உருப்படியான வேலை!

நடிகை சமந்தா வீட்டில் செடி வளர்க்க சொல்லி விடுத்த சேலஞ்சை நடிகை ராஷ்மிகா மந்தனா நிறைவேற்றியுள்ளார்.

 

நடிகை சமந்தா வீட்டில் செடி வளர்க்க சொல்லி விடுத்த சேலஞ்சை நடிகை ராஷ்மிகா மந்தனா நிறைவேற்றியுள்ளார்.

ஆந்திர மாநில எம்பி சந்தோஷ்குமார் லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருக்கும் செடிகளை முறையாகப் பராமரிப்பதற்காக ஒரு சேலஞ்சை உருவாக்கினார். அதில் நடிகை சமந்தாவை டேக் செய்து வீட்டு செடிகளை பராமரிக்கும் புகைப்படத்தை பதிவேற்ற சொல்லியிருந்தார். அதை ஏற்ற சமந்தா தன் வீட்டில் செடிகளை பராமரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த சேலஞ்சில் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஷில்பா ரெட்டி ஆகியோரை டேக் செய்திருந்தார்.

இந்நிலையில் ராஷ்மிகா சமந்தாவின் சேலஞ்சை ஏற்று வீட்டில் செடி நடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவர் நடிகைகள் ராஷி கண்ணா, கல்யாணி பிரியதர்ஷன் , ஆஷிகா ரங்கநாத் ஆகிய மூவரையும் இப்போது சேலஞ்சை ஏற்குமாறு டேக் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News