×

தினமும் இத்தனை தம் அடிப்பிங்களா?... வெளிப்படையாக பேசிய ரஷ்மிகா

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் என்ற கேள்விக்கு  ரஷ்மிகா கடுப்பாகவில்லை

 
86c0fac0-fd18-4f29-aa4e-1ca09fa8dd3a

படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் ரஷ்மிகா. தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது போஸ்ட் செய்து வருகிறார். மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.

தன்னை யாராவது கலாய்த்து மீம்ஸ் போட்டால் கூட அதையும் லைக் செய்வார் ரஷ்மிகா. அவரின் இந்த குணம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்தார் ரஷ்மிகா.

அப்பொழுது ரசிகர் ஒருவரோ, நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் என்று கேட்டார். அந்த கேள்விக்காக ரஷ்மிகா கடுப்பாகவில்லை, மாறாக கூலாக பதில் அளித்திருக்கிறார். ரஷ்மிகா கூறியிருப்பதாவது, நான் சிகரெட் பிடித்தது இல்லை. சிகரெட் பிடிப்பவர்கள் பக்கமே செல்ல மாட்டேன் என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News