எதுக்குமா இவ்வளவு சோகம்!... ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படம்!... அட விஷயம் இதுதானா?!...

 
எதுக்குமா இவ்வளவு சோகம்!... ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படம்!... அட விஷயம் இதுதானா?!...
புஷ்பா 2 திரைப்படத்தின் டப்பிங்-கில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையும் படிங்க:  மகாநதி படத்தைப் பார்த்துட்டு தயாரிப்பாளர் செய்த ரகளை…! கமல் வீட்டுக்கே போயிட்டாரே..! தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்தின் மூலமாக அல்லு அர்ஜுன் பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார். படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் காரணமாக இதன் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்கள். முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கின்றது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். அவருக்கு பதிலாக இரண்டாவது பாகத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடனமாடி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ கிளிப்ஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இரண்டாவது பாகத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதால் படக்குழுவினர் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதுக்குமா இவ்வளவு சோகம்!... ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படம்!... அட விஷயம் இதுதானா?!... இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கின்றது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழுவினர் தற்போதே தொடங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நேற்று இப்படத்தின் ரன் டைம் வெளியாகி இருந்தது. அதன்படி புஷ்பா 2 திரைப்படத்தின் ரன் டைமானது 3 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும். தற்போது இப்படத்தின் தயாரிப்பு குழுவினர் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்து அப்டேட் வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி இப்படத்தின் லான்ச் ஈவென்ட் வரும் நவம்பர் 17ஆம் தேதி காந்தி மைதானம், பாட்னா பகுதியில் மாலை 5 மணிக்கு நடைபெற இருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டப்பிங் பேசும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் சோகமாக காணப்படுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன ஆச்சு என்று கவலையுடன் கேட்டு வருகிறார்கள். இதையும் படிங்க:  Coolie: என் பசங்கப்பா.. போட்டி போடுவாரா? ‘கூலி’ படத்தின் ரிலீஸ் தேதி அது இல்லையாம் இந்நிலையில் அவர் அந்த புகைப்படத்துடன் தெரிவித்திருந்ததாவது: 'புஷ்பா 2 திரைப்படத்தின் ஷூட்டிங் ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. இப்படத்தின் முதல் பாதியின் டப்பிங் முடிந்துவிட்டது. இரண்டாவது பாதியின் டப்பிங் தான் தற்போது பேசப்பட்டு வருகின்றது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாவது பாதி மிகப் பிரமாதமாக இருக்கின்றது. என் வாழ்க்கையில் மிகச் சிறந்த அனுபவம் இது. அது மட்டும் இல்லாமல் எனது முகம் இப்படி இருப்பதற்கு காரணம் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது என்கின்ற சோகத்தில் இருக்கின்றேன்' என்று தெரிவித்து இருக்கின்றார்.

From Around the web