×

கியூட்னஸ் அள்ளுது... எக்ஸ்பிரஷன்ஸ் குயின் ராஷ்மிகாவின் வைரல் புகைப்படம்!
 

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட கியூட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!
 
 
கியூட்னஸ் அள்ளுது... எக்ஸ்பிரஷன்ஸ் குயின் ராஷ்மிகாவின் வைரல் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

மேலும் தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் பூஜா ஹெக்டேவும் இவரும்  நடிக்க உள்ளார் என்ற பேச்சும் கோலிவுட்டில் அடிபட்டுவருகிறது. எக்ஸ்பிரஷன் குயின் என்று இளைஞர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

சினிமா ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டீவாக உள்ளார். அந்த வகையில் தற்போது கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்கள் அத்தனை பேரது மனதையும் கவர்ந்திழுத்துவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News