கட்டாய ஓய்வு மிகவும் கவலையை அளிக்கிறது - ராஷ்மிகா மந்தனா உருக்கம்

நேஷனல் கிரஷ்  என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கு தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதுமே ரசிகர்கள் உண்டு.
 
rashmika

நேஷனல் கிரஷ்  என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கு தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதுமே ரசிகர்கள் உண்டு. ராஷ்மிகா தற்போது நடித்து வரும் படம் மைசா. இந்த படத்தின் நடனப் படப்பிடிப்பின் போது, அவரது வலது இடுப்புப் பகுதியில் காலையும் இடுப்பையும் இணைக்கும் நான்கு முக்கியத் தசைநார்களில் ஒன்று விலகிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் தற்ப்ப்போது அதற்குரிய சிகிச்சையில் உள்ளார்.  

இந்த நிலையில் காயம் காரணமாக தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் ராஷ்மிகா தற்போதைய நிலை குறித்து சமூக வலைதளங்களில் தனது நிலையை விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்:

தற்போது எனது பொழுதுகள் முழுவதும் வீட்டிலேயே கடந்து செல்கின்றன. இந்த கட்டாய ஓய்வு எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. ஓடி ஆடி வேலை செய்த அந்த பிசியான நாட்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். விரைவில் உடல்நலம் தேறி மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த பதிவைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பழைய உற்சாகத்துடன் படப்பிடிப்பிற்குத் திரும்ப வேண்டும் என இணையத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web