Categories: Cinema News latest news

உங்களோட ஆடணும், உங்ககிட்ட பேசணும்., எங்க செல்லம் ராஷ்மிகாவை புலம்ப வச்சிடீங்களே.!?

தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது பல இளம் ஹீரோயின்களுக்கு வெறும் கனவாகவே இருந்திருக்கும். அது சிலருக்கு மட்டுமே நடந்திருக்கும் அப்படி ஓர் அதிர்ஷ்டசாலியாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

முதலில் இந்த படத்திற்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க படக்குழு பாலிவுட் ஹீரோயின்களை தான் தேடி வந்துள்ளனர். அதன் பின்னர் தான் ராஷ்மிகா பெயர்  டிக் ஆகியுள்ளது. இதில் ராஷ்மிகா ரெம்ப ஹேப்பி. அது அப்படியே நேற்று எடுத்த அனைத்து போட்டோவிலும் எதிரொலித்தது.

அந்த புகைப்படங்கள், அனைத்திலும் விஜயை பார்த்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார் ராஷ்மிகா. இவர், பல பேட்டிகளில் கூட விஜய் சாரை எனக்கு ரெம்ப பிடிக்கும் என கூறியிருந்திருப்பர். இவர் தனது டிவிட்டரில் இன்று தளபதி 66பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு விஜயை பற்றி எழுதியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- தெலுங்கு ஹீரோக்களை பார்த்தாவது திருந்துங்க., பொதுமேடையில் புலம்பி தள்ளும் தயாரிப்பாளர்.!

 

அதில், இதுவரை திரையில் பார்த்து ரசித்த விஜய் சாரை நேரில் பார்க்கிறேன். அவருடன் பேச போகிறேன், அவருடன் ஆட போகிறேன் . கனவு எல்லாம் நடக்க போகிறது என அவ்வளவு மகிழ்ச்சியாக விஜய் படத்தில் நடிப்பதை பற்றி பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா.  இதனை பார்த்த ராஷ்மிகா ரசிகர்கள், எங்க செல்லத்தை இப்படி புலம்ப வைத்துவிட்டாரே விஜய் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan