வந்த இடத்தில் என்ன வேலை இது? பொது இடத்தில் ராஷ்மிகா - விஜய் ஜோடி அலப்பறை!
ராஷ்மிகா - விஜய் ஜோடி:
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தவர்கள் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவர் கொண்டா. இவர்கள் இருவரும் வெளிப்படையாக தெரிவித்துக் கொள்ளவில்லை என்றாலும் ரகசியமாக பல வருடங்களாக காதலித்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நெருங்கிய குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் இருவருமே நடித்திருக்கிறார்கள்.
பொது இடத்தில் அலப்பறை:
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்,
நடிகை ராஷ்மிகா மந்தனா கணவர் விஜய் தேவர் கொண்டாவுடன் ஜிம்மில் படு ரொமான்ஸாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதை பார்த்த நெட்டிசன்ஸ்… வந்த இடத்துல என்ன வேலை இது? என விமர்சித்து வருகிறார்கள்.
