பார்த்து பார்த்து கவனிக்கும் ராஷ்மிகா - மேடையில் வழிந்த காதல்!
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் விஜய் தேவர் கொண்டா மற்றும் ராஷ்மிகா அவர்கள் இருவரும் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்த போது நட்பு உருவாக்கி பின்னர் காதலாக மாறி பெற்றோர்கள் சம்மதத்துடன் பல வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டனர் .
மிக பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக திருமணத்திற்கு பிறகும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவர் கொண்டா இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள ரணபாலி திரைப்படம் உருவாகி வருகிறது.

ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் உருவாக்கி உள்ள இந்த திரைப்படம் வரலாற்று பின்னணி கொண்ட அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் விழாவில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரும் கலந்து கொண்ட போது ராஷ்மிகா விஜய் தேவர் கொண்டாவுக்கு முகம் துடைத்துவிட்டு அக்கறையான மனைவி போல் கவனித்துக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
