×

பிரபல இயக்குனர் வீட்டில் குழந்தை முதல் பாட்டி வரை 14 பேருக்கு கொரோனா...

15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா.
 
maxresdefault

வைபவ், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் படம் மூலம் இயக்குநரானவர் ரத்னகுமார். அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் படத்திற்கு வசனம் எழுதியவர். அவர் போட்டிருக்கும் ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.


ரத்னகுமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு என்று தெரிவித்துள்ளார்.

பெரிய கண்டத்தை தாண்டிவிட்டீர்கள். இனி எல்லாம் நல்லதாகத் தான் நடக்கும். உடம்பை பார்த்துக் கொள்ளவும். குடும்பத்தோடு கொரோனா என்றால் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. நீங்கள் குணமானதே எங்களுக்கு போதும். தைரியமாக இருங்கள் அண்ணா என தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News