யார் கூப்பிட்டாலும் ரவி மோகன்தான் ஃபர்ஸ்ட்!.. பிரதீப் ரங்கநாதன் ஃபீலிங்!...
குறும்படங்கள் எடுத்து வந்த பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படம் கோமாளி. பிரதீப்பை யாரும் நம்பாத நிலையில் அவரை நம்பி அந்த படத்தில் நடித்தவர் அப்போதைய ஜெயம் ரவி
. அப்படி வெளியான கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் மூன்று வருடங்களுக்கு பின் ஒரு கதை எழுதி பிரதீப்பெ இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார்.
அப்படி வெளியான லவ் டுடே திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளியது. அதன்பின் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன், டியூட் ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி வசூலைத் தொட்டது. இப்படி தொடர்ச்சியாக மூன்று 100 கோடி படங்களை கொடுத்த நடிகராக பிரதிபரங்கநாதன் மாறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று ஆனந்த விகடன் விருது விழாவில் பிரதீப் ரங்கநாதனுக்கு விருது கொடுக்கப்பட்டது. அந்த விருதை அவருக்கு நடிகர் ரவி மோகன் அளித்தார். அப்போது பேசிய பிறகு பிரதீப் ‘கோமாளி படம் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகிறது.. இப்போதும் ரவி சார் போன் செய்தால் எனக்கு பதட்டமாக இருக்கும்.. எனக்கு மேடை என்றால் பதட்டமாக இருக்காது ஆனால் இப்போது பதட்டமாக இருப்பதற்கு காரணம் ரவி மோகன் சார்தான்.. எத்தனை வயதானாலும் எல்லோரும் அம்மாவுக்கு குழந்தைதான்.. எனக்கு அவர் அப்படித்தான்..
படப்பிடிப்பு தளத்தில் யாராவது என்னிடம் ‘உனக்கு நல்ல பழக்க வழக்கங்கள் இருக்கிறது’ என்று சொன்னால் அதற்கு முழு காரணம் அவர்தான்’ என்று பீலிங்கோடு பேசினார். அதை அருகில் நின்று கேட்ட ரவி மோகன் ‘ஒரே நேரத்தில் உன்னை வெற்றிமாறன், மணிரத்தினம், அஸ்வத் மாரிமுத்து மற்றும் நான் என நான்கு பேரும் அழைத்தால் நீ யாருக்கு கால்ஷீட் கொடுப்பாய்?’ என்று கேட்டார். அதற்கு ‘ரவி சாருக்குதான் கொடுப்பேன்’ என பிரதீப் பதில் சொன்னர். அதோடு ‘என்னுடைய மத்த படங்களை முடிச்சுட்டு வரேன் சார்’ என பிரதீப் சொன்னார்.
