ரவி மோகன் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... 'கராத்தே பாபு' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
jr

சபரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த நிலையில், அடுத்தடுத்து ரவி மோகனுக்கு ஹேப்பி நியூஸ் வந்துக் கொண்டே இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாகவே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கராத்தே பாபு தற்போது ரிலீஸ் ஆக ரெடியாகி உள்ளது. அதன் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

'தாதா' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ள இந்தப் படம், அரசியலின் வெளிப்படையான முகத்தை மட்டுமல்லாமல், ஒரு அர்ப்பணிப்புள்ள சட்டமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட வாழ்க்கை, அதிகாரத்தின் பின்னணியில் அவர் சந்திக்கும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்கள் ஆகியவற்றை யதார்த்தமாக சித்தரிக்கும் அரசியல் அதிரடி நாடகமாக இப்படம் உருவாகியுள்ளது.

jayam

 படத்தின் கதாநாயகனாக ரவி மோகன் நடித்துள்ளார். கதாநாயகியாக, தமிழகத்தின் முன்னாள் டிஜிபி சங்கர் ஜீவால் அவர்களின் மகள் தாவூதி ஜீவால் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். மேலும் நாசர், கே.எஸ். ரவிக்குமார், சக்தி வாசுதேவன், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், காரத்தே பாபு திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Tags

From Around the web