ஆகஸ்ட் 28-ல் ரவி மோகனின் கராத்தே பாபு ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?

 
Karathey babu

ரவி மோகன் நடித்திருக்கும் பொலிட்டிக்கல் ஆக்ஷன் டிராமா ஜானர் படம் தான் 'கராத்தே பாபு'. 'பிக் பாஸ்' கவினின் 'டாடா' படத்தை இயக்கிய கணேஷ்.கே.பாபு தான் இதை இயக்கியிருக்கிறார்.

இதில் ரவி மோகனுக்கு ஜோடியாக தவ்தி ஜிவால் நடித்துள்ளார். ஆல்ரெடி வெளியான இதன் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டியது. 

முதலில் படத்தை வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே தேதியில் தான் 'ஏழு கடல் ஏழு மலை' படமும் ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது. ராம் இயக்கியிருக்கும் இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

From Around the web