மீண்டும் இணையப்போகும் ரவி மோகன் - ஆர்த்தி? பேச்சுவார்த்தை தீவிரம்!

 
ravi  mohan

நடிகர் ரவி மோகன் அவரது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக விவாகரத்து அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆர்த்தியிடம் அவரது இரு மகன்களும் இருக்கிறார்கள். இப்படியான நேரத்தில் நடிகர் ரவி மோகன் சமீபத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். 

ஆர்த்தி மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்திருந்தார். மிகவும் கோபப்பட்டு கொந்தளித்து பேசி இருந்தார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் நடிகர் ரவி மோகன் நான் பத்திரிகையாளரை சந்தித்து அப்படி பேசியது யாருக்கேனும் மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பகிரங்கமாக கூறினார்.

ravi mohan

இதனால் நடிகர் ரவி மோகன் மீண்டும் தனது மனைவி ஆர்த்தியுடன் இணைந்து வாழ தயாராக இருக்கிறாரா என்ற ஒரு கேள்வி சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் நிலவுகிறது. ரவி மோகன் மற்றும் இருவது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் சமயத்தில் அவர்களை குறித்து எந்த விதத்திலும் அவதூறு பரப்பும் வகையில் பேசக்கூடாது என்பதுதான் நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு .

இப்படியான சமயத்தில் ரவி மோகன் மன்னிப்பு கேட்டிருப்பது மீண்டும் ஆர்த்தியிடம் வாழ போவதாக ஒரு கேள்விக்குறியும் ஆச்சரியமும் எழுந்திருக்கிறது. இது குறித்து தீவிரமான பேச்சு வார்த்தை இரு குடும்பத்தினருடைய நடைபெற்று வருகிறதா? என்ற ஒரு கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான். 

Tags

From Around the web